
கடந்த டிசம்பர் சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரிஷப் பண்ட், கிட்டத்தட்ட 18 மாதங்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மெல்லமெல்ல குணமடைந்து தற்போது நடக்கும் அளவிற்கு வந்திருக்கிறார் ரிஷப் பந்த். இந்த வருடம் ஐபிஎல் சீசனில் ரிஷப் பந்த் இல்லாததால் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.
இந்த சீசனில் ரிஷப் பந்த் விளையாடவில்லை என்றாலும், முடிந்தவரை டெல்லி மைதானத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் அவரை அழைத்துவர முயற்சிப்போம் என்று டெல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசினார் டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
டெல்லி அணி இந்த சீசனின் முதல் போட்டியை லக்னோவில் விளையாடியது. இரண்டாவது லீக் போட்டியை இன்று டெல்லியில் விளையாடி வருகிறது. இப்போட்டியின் நடுவே டெல்லி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “எங்களுக்கு ரிஷப் பந்த் வேண்டும்” என்று கரகோசம் எழுப்பினர்.