
IPL 2023: Rohit Sharma becomes the 4th cricketer to complete 6000 runs in IPL! (Image Source: Google)
ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுபரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 28 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இப்போட்டியில் 28 ரன்களை சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது வீரர் எனும் புதிய மைல் கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.