
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் அடித்துக் கொடுத்தார். நல்ல துவக்கம் கொடுத்த கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. ஆகையால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்து வீச்சில் ஷாம் கர்ரன் அசத்தினார். இந்த போட்டியில் ஷிகர் தவான் இல்லாததால் ஷாம் கர்ரன் தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.
இதையடுத்து, 160 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. பின்னர் வந்த மேத்தியு ஷாட் 34 ரன்கள் அடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார் இவர் 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிவுட் ஆனார். அணிக்காக கடைசியில் வந்து பினிஷிங் ரோல் விளையாடிய சாருக் கான் 10 பந்துகளில் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணியின் கேப்டன் சாம் கரன் பேசுகையில், “எங்களுடைய ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். ரபாடா வழக்கம்போல தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நல்ல துவக்கம் இல்லாதபோது, மிடில் ஆர்டரில் சிக்கந்தர் ராசா விளையாடியது தான் திருப்புமுனையாக அமைந்தது.