மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அரைசதம் கடந்து அசத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்று வரும் 64ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Trending
அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , பிரித்வி ஷா களமிறங்கனர். தொடக்கத்தில் இருவரும் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரைலீ ரூஸோவ் அதிரடி காட்டினார். அவர் பந்துகளை, , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டார் .
பிரித்வி ஷா , ரைலீ ரூஸோவ் இருவரும் அரைசதம் அடித்தனர். ஷா 54 ரன்களில் ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். இறுதியில் 20 ஓவர்களில் டெல்லி 2விக்கெட் இழப்பிற்கு 213ரன்கள் எடுத்தது. ரிலீ ரோசோவ் 82 ரன்கள் , பில் சால்ட் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
Shaw-ndaar 50 in #TATAIPL for Prithvi after 12 innings
— JioCinema (@JioCinema) May 17, 2023
Will his valiant knock guide Delhi closer to the playoffs? #PBKSvDC #IPLonJioCinema #EveryGameMatters #IPL2023 | @DelhiCapitals pic.twitter.com/ZKOxGwVlfi
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் ஒரு சில போட்டிகளாக பெஞ்சிலும் அமரவைக்கப்பட்டார். இந்நிலையில் தான் மிட்செல் மார்ஷுக்கு காயம் ஏற்படவே அவரது இடம் பிரித்வி ஷாவுக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பிரித்வி ஷா தனது கம்பேக் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக பிரிதிவி ஷா ஃபார்முக்கு திரும்பும் வகையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now