ஹெட்மையர் ஒரு ஃபினிஷராக முத்திரை குத்தப்பட்டுள்ளார் - சுனில் கவாஸ்கர்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேலும், மூன்றாண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Trending
முன்னதாக குஜராத்திற்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் வெற்றியைப் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதிலுல் ஷிம்ரான் ஹெட்மையரின் அதிரடியான ஆட்டம் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஷிம்ரோன் ஹெட்மையர் ராஜஸ்தான் ராயல்ஸால் ஒரு ஃபினிஷராக முத்திரை குத்தப்பட்டுள்ளார், ஆனால் அவர் பேட்டிங் வரிசையில் அதிகமாக பேட் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டால், அவர் அதிக ரன்களை குவித்து, தனது அணிக்காக அதிக மேட்ச் வின்னிங் நாக்ஸை விளையாட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now