
ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலமாக காணப்படுகிறது. இதேபோன்று மோயின் அலியும் சிவம் துபேவும் பேட்டிங்கில் கூடுதல் பலத்தை சேர்க்கிறார்கள்.
ஜடேஜா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்றாலும் இது நெடுந்தொடர் என்பதால் அவர்கள் ஃபார்முக்கு வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்சனையாக இருப்பது வேகப்பந்துவீச்சு தான். வெளிநாட்டில் இருந்து பந்துவீச்சாளர் பெரிய அளவில் யாரும் இல்லை.
இதனால் சிஎஸ்கே பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறது. இதனை தீர்க்க வேண்டும் என்றால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் வருவதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துக்கூறி வந்தனர். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது.