
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் - பிலிப் சால்ட் இணை களமிறங்கியனர். இதில் பிலிப் சால்ட் சந்தித்த முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வார்னருடன் மிட்செல் மார்ஷ் ஜோடிசேர்ந்தார்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிவந்த மிட்செல் மார்ஷ் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னரும் 21 ரன்களை எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தரிடம் விக்கெட்டை இழந்தார்.