
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வரும் லீக் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. டெவான் கான்வெ மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் ஓபனிங் இறங்கி நன்றாக ஆரம்பித்தனர். திட்டமிட்டு வருண் சக்கரவர்த்தியை உள்ளே எடுத்து வந்தார் நிதிஷ் ராணா. இவரது பந்தில் தவறான ஷாட் விளையாடி ருத்துராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த அஜிங்கியா ரகானே (16 ரன்கள்) விக்கெட்டையும் ஆடவைத்து தூக்கினார் வருண் சக்கரவர்த்தி. மீண்டும் ஒருமுறை சிறப்பாக விளையாடி வந்த டெவான் கான்வே 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து. இம்முறை மேலே களமிறக்கப்பட்ட அம்பத்தி ராயுடு 4 ரன்கள் அடித்திருத்தபோது, சுனில் நரேன் பந்தில் தவறான ஷாட் விளையாடி க்ளீன் போல்டு ஆனார். விரக்தியோடும் வெளியேறினார்.
அடுத்ததாக உள்ளே வந்தார் மொயின் அலி. இவர் பார்மில் இல்லையென்பது பந்துகளை திணறித்திணறி எதிர்கொண்டத்தில் இருந்தே தெரிந்தது. இதைப்பயன்படுத்தி எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பந்தை டர்ன் செய்தார் சுனில் நரேன். இதை மிஸ் செய்த மொயின் அலி(1) போல்டாகி வெளியேறினார்.
Sunil Narine is trapping batters in his of spin#CSKvKKR #TATAIPL #IPL2023 #IPLonJioCinema #EveryGameMatters | @KKRiders pic.twitter.com/XipoUUcpYo
— JioCinema (@JioCinema) May 14, 2023