-mdl.jpg)
இந்திய அணியில் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்பட்டு வரும் சூரியகுமார் யாதவ், கடந்த 2022ஆம் ஆண்டு மிகச்சிறந்த பார்மில் இருந்தார். நம்பர் ஒன் டி20 வீரராகவும் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு 31 டி20 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 1,200 ரன்கள் வரை விலாசினார். அதில் 2 சதங்கள் 9 அரைசதங்கள் அடங்கும்.
இப்படிப்பட்ட வீரருக்கு 2023 ஆம் ஆண்டு நன்றாக துவங்கியிருந்தாலும், ஒருநாள் தொடர்கள் எதிர்பார்த்த ஒரு அளவிற்கு அமையவில்லை. மிக மோசமான பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கும் வந்திருக்கிறார். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, மூன்று போட்டிகள் விளையாடி மூன்றிலும் முதல் பந்தலிலேயே கோல்டன் டக் அவுட் ஆனார்.
அப்படியே ஐபிஎல் போட்டிகளுக்கு வந்த சூரியகுமார் யாதவ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு அவுட் ஆனார். தற்போது இப்படிபட்ட மோசமான பார்ம் மற்றும் ரன்கள் கட்டாயம் அடித்தே ஆகவேண்டும் எனும் இக்கட்டான சூழலில் இருக்கும் சூரியகுமார் யாதவிற்கு சில அறிவுரைகளை ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.