ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பிளேயிங் லெவனில் இருந்த அனைத்து ஆர்சிபி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸுக்கு விலா பகுதியில் பிரச்னை இருப்பதால் முந்தைய ஆட்டத்தைப் போன்றே இம்பாக்ட் ப்ளேயராகவே சேர்க்கப்பட்டார். இதனால் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார்.
போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் பெங்களூர் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 24 லட்சம் ரூபாய் அபராதமும், போட்டியில் கலந்துகொண்ட 11 வீரர்களுக்கு தலா 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Trending
விராட் கோலிக்கு பிசிசிஐ இரண்டாவது முறையாக அபராதம் விதித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.
அப்போட்டியில் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் ஆட்டம் இழந்தபோதும், சிவம் துபே கேட்ச் ஆனபோதும் விராட் கோலி கத்திக் கூச்சல் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதுபோன்ற செயல்கள் ஐபிஎல்லின் விதிமீறல்களுக்கு உட்பட்டது என்பதால் பிசிசிஐ விராட் கோலியின் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now