Advertisement

ஐபிஎல் 2023: தோல்வியடைந்தாலும் சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!

ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக முறை 500 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

Advertisement
IPL 2023: Warner Surpasses All with Seventh Consecutive 500+ Run Season!
IPL 2023: Warner Surpasses All with Seventh Consecutive 500+ Run Season! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2023 • 08:42 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2023 • 08:42 PM

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும் ருதுராஜ் 79 ரன்களையும் துபே 22 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் நோர்ட்ஜே, சகாரியா, கலீல் அஹமது ஆகியோர் தலா 1 விக்கட்டை வீழ்த்தினர். 

Trending

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 86 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்களையும் தீக்‌ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தேஷ்பாண்டே, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 12ஆவது முறையாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றியை மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறியது. 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்ட்லஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேவிட் வார்னர் 516 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிகமுறை 500 ரன்கள் எடுத்த பட்டியலில் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். இவர் 7 சீசன்களில் 500 ரன்களை தாண்டியுள்ளார். இந்த பட்டியளில் விராட் கோலி 6 முறையும், ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் தலா 5 முறையும் 500 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement