
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்ற ஆறுதலுடன் தொடரை முடித்துள்ளது. மேலும் இப்போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில், சிஎஸ்கேவுடனான இந்த தோல்வியானது ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில், “இப்போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டம் எங்களிடமிருந்து கிட்டத்தட்ட விலகிச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன், நாங்கள் உண்மையில் ஒருபோதும் திரும்பி வரவில்லை. 230 ரன்களைத் துரத்துவது எப்போதும் ஒரு தந்திரமான இலக்கு. ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அணிகளில் இழக்க எதுவும் இல்லை என்பதால் அவர்கள் முழு வீச்சில் செயல்படுகிறார்கள். ஆனால் நாங்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட முடியவில்லை.