தொடரின் மிகச்சிறந்த கேட்ச்; ஒற்றை கையில் பிடித்த ஆவேஷ் கான் - காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணைன் வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் சால்ட் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து சுனில் நரைனுடன், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார்.
Trending
இவர்கள் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிவரும் சுனில் நரைன் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் கேகேஆர் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மற்றுமே இழந்து 100 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி உள்ளது.
A brilliant Caught & bowled from Avesh Khan. pic.twitter.com/ZmbiRmOaSO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 16, 2024
அதன்படி இன்னிங்ஸின் நான்காவது ஓவரை ஆவேஷ் கான் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்த பில் சால்ட் எதிர்கொண்டார். அதனை பில் சால்ட் நேரடியாக அடிக்க முயல, பந்தில் போதிய வேகம் இல்லாத காரணத்தால் அந்த ஷாட்டில் பெரிதளில் வேகமும் இல்லாமல் பந்துவீச்சாளரை நோக்கி சென்றது. அதனை அவேஷ் கானும் அருமையாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now