நாங்கள் பவர்பிளே ஓவரில் ரன்களைச் சேர்க்க தவறவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் வார்னர், ரிஷப் பந்த் ஆகியோரது அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானா 45 ரன்களையும், டேரில் மிட்செல் 34 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதியில் மகேந்திர சிங் தோனி 4 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்தார்.
Trending
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இப்போட்டியின் பவர்பிளே ஓவர்களுக்கு பிறகு எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பான கம்பேக்கை கொடுத்தனர். அவர்களில் முயற்சியால் நாங்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தினோம். இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸின்போது பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது.
இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா அதிக பந்துகளை எதிர்கொண்டாலும் அதனை அவரால் ரன்களாக மாற்றமுடியவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு பிட்சில் கூடுதல் மற்றும் ஸ்விங் இருந்ததே காரணம். அதன் காரணமாக எங்களால் முதல் மூன்று ஓவர்களில் போதிய ரன்களைச் சேர்க்க முடியவில்லை. அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் முதல் பாதிக்கு பின் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பவர் பிளே ஓவர்களில் சொதப்பியது பின்னடைவாக இருந்தது.
நாங்கள் ரன் ரேட்டை வேண்டிய தேவையில் இருந்து கொண்டே விளையாடினோம். தீபக் சஹாருக்கு தொடக்கத்திலேயே மூன்று ஓவர்கள் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கின்போது முதல் 4 ஓவர்களை நன்றாக வீசினோம். பவர் பிளேவின் கடைசி 2 ஓவர்கள் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சென்றது. 2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் இதுகுறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை. மேலும் இப்போட்டியில் நாங்கள் அவர்களுக்கு கூடுதல் ரன்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now