பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்; ரிஷப் பந்திற்கு மீண்டும் அபராதம்!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த சுனில் நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Trending
அதன்பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் 84 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் விக்கெட்டை இழக்க, 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய் ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும், ரிங்கு சிங் 26 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.
இதையடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Rishabh Pant has been fined 24 lakh for the second consecutive time!#IPL2024 #DelhiCapitals #DCvKKR #RishabhPant pic.twitter.com/Z43tLgm4gg
— CRICKETNMORE (@cricketnmore) April 4, 2024
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு போட்டி கட்டணத்திலிருந்து ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு சீசனில் அவருக்கு விதிக்கப்படும் இரண்டாவது அபராதமாகும். இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போதும் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக ரிஷப் பந்திற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now