
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்கியது. அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனிலாவாது கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கிய அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.
மேலும் அணியின் துணைக்கேப்டனாக இளம் அதிரடி விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மொஹாலியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சீசனில் இருந்து எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இந்த சீசனில் விளையாடும் மைதானமானது புதிய மைதானம். இங்குள்ள நிலைமைகளுக்குப் பழகுவதற்கு நாங்கள் 5-6 பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளோம். கடந்த சீசனில் எங்களின் பெரும்பாலான வீரர்களை நாங்கள் தக்கவைத்துள்ளோம், மேலும் எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளோம்.