ஐபிஎல் 2024: விஷ்னு வினோத்திற்கு மாற்றாக ஹர்விக் தேசாயை ஒப்பந்தம் செய்தது மும்பை!
காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய விஷ்னு வினோத்திற்கு மாற்றாக ஹர்விக் தேசாயை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இதுவரை 24 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற சுவாரஸ்யத்திற்கு பஞ்சாமில்லாம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறுகிறது.
அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அதிரடி வீரர் வில் ஜேக்ஸிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Trending
அதேசமயம் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்படிருந்த விக்கெட் கீப்பர் பேட்டர் விஷ்னு வினோத் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். பயிற்சியின் போது அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் இந்த சீசனிலிருந்து விலகினார்.
இதனையடுத்து விஷ்னு வினோத்திற்கு மாற்றாக சௌராஷ்டிரா அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஹர்விக் தேசய் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் சதமடித்து அசத்தியுள்ள ஹர்விக் தேசய் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now