
ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது திலக் வர்மா, நெஹால் வதேரா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்த்து. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வா, சஞ்சு சாம்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்களை குவித்தார். மேலும் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்து ராஜஸ்தான் அணி வெற்றிக்கு உதவிய சந்தீப் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.