Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 10 -15 ரன்கள் குறைவாகவே எடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Advertisement
 குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2024 • 01:06 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்களைச் சேர்த்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2024 • 01:06 PM

இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 104 ரன்களையும், சாய் சுதர்ஷன் 103 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேரிம் மிட்செல், மொயீன் அலி இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மற்ற வீரகள் சோபிக்க தவறினர்.

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷுப்மன் கில், “இப்போட்டியில் தசைபிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக என்னால் ஃபீல்டிங் செய்ய முடியவில்லை. உங்களை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஆதரிக்கும் போது உங்களது வெற்றியும் எளிதாகிவிடுகிறது. நாங்கள் பேட்டிங் செய்யும் போது எங்கள் மனதில் எந்த இலக்கும் இல்லை. எங்களுக்கு முன்னாள் இருந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். 

களத்தில் எனக்கும் சாய் சுதர்ஷனுக்கும் நல்ல உரையாடல் இருந்தது. கடந்த ஆண்டு கூட நாங்கள் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்துள்ளோம். அவருடன் பேட்டிங் செய்வாது வெடிக்கையான ஒன்றாக உள்ளது. இன்றைய போட்டியில் நாங்கள் இருவரும் இணைந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் என்று நினைக்கிறேன். மேலும் மோஹித் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எங்களுக்காக இதனை செய்துவருகிறார். 

கடந்த ஆண்டு அவரது பந்துவீச்சு எங்களை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்ல உதவியது. இந்த ஆண்டில் அவருக்கு சில மோசமான ஆட்டங்கள் இருந்தது. அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருகட்டத்தில் நாங்கள் 250 ரன்களை எட்டுவோம் என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே வீரர்கள் கடைசி சில ஓவர்களில் எங்களை கட்டுப்படுத்தினர். அதனால் நாங்கள் 10 -15 ரன்கள் குறைவாகவே எடுத்தோம் என்று நினைத்தேன்” எனு தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement