
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இப்போட்டியானது இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.