வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஜித்தேஷ் சர்மா!
இன்றைய போட்டியில் எங்கள் அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 49 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 66 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார்.
Trending
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் குமார் ரெட்டி 37 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிவுக்கு பின் பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா, “இன்றைய போட்டியில் எங்கள் அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினர். அதிலும் குறிப்பாக அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நாங்கள் இதை எதிர்கொண்டுள்ளோம். நீங்கள் களத்தில் செயல்பாடத வரை உங்களுடைய திட்டம் எதுவும் உங்களுக்கு உதவாது. நாங்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இன்றைய போட்டியில் விளையாடினோம் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now