Advertisement

நாங்கள் அனைத்து துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் - கேஎல் ராகுல்!

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட அனைத்திலும் மோசமானஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என தோல்வி குறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement
நாங்கள் அனைத்து துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் - கேஎல் ராகுல்!
நாங்கள் அனைத்து துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2024 • 01:21 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்களையும், பில் சால்ட், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் தலா 32 ரன்களையும் சேர்த்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2024 • 01:21 PM

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 36 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கேகேஆர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Trending

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ரகுல், “இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் மிகப்பெரிய இலக்கை எடுக்க வேண்டியிருந்தது. மிகப் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும்போது அதிரடியாக விளையாட முயற்சிக்கும் போது நீங்கள் விக்கெட்டுகளை இழக்க நேரீடும். இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட அனைத்திலும் மோசமானஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் பவர் பிளேவில் அதிக அழுத்தத்தை எதிரணிக்குத் தருகிறார்கள். எங்கள் அணியின் இளம் பந்துவீச்சாளர்களால் அதை சமாளிக்க முடியவில்லை. இங்கே நாம் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளைடாட வேண்டியிருக்கும், இதுதான் ஐபிஎல் தொடர். அப்போது நமது திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த பிட்ச்சில் 235 ரன்கள் என்பது மிகவும் அதிகம். 20 முதல் 30 ரன்கள் கூடுதலாகவே அடிக்கப்பட்டது.

எங்கள் பந்து வீச்சாளர்கள் தங்களால் இயன்றதை முயற்சி செய்து பார்த்தார்கள். அவர்கள் தவறுகளிலிருந்து விரைவாக கற்றுக் கொண்டால் அணிக்கு மிகவும் நல்லது. கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டம் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. மேலும் இதுதான் நாங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் கடைசிபோட்டி. மெலும் உள்ள மூன்று போட்டிகளை நாங்கள் எதிரணியின் மைதானத்தில் விளையாடவுள்ளதால் அதற்காக தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement