
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளேசிஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார்.
தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாட இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் க்ரீன் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.