
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றனது. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் குயின்டன் டி காக் பவுண்டரிகளுக்கு விளாச, அடுத்த பந்தையும் பவுண்டரி அடிக்கு முயற்சியில் பந்தின் வேகத்தை கணிக்க தவறினார்.
இதனால் மூன்றாவது பந்தை டி காக் தவறவிற, அது ஸ்டம்புகளை தகர்த்தது. இதனால் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளையாடிய டி காக் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் கடந்த போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் களமிறங்கினார்.
Just Trent Boult things
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
Wicket in his very first over, again
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia #TATAIPL | #LSGvRR | @rajasthanroyals pic.twitter.com/tF9M2yrU6K