அறிமுக போட்டியில் அதிவேகமாக பந்துவீசி மிரட்டும் மயங்க் யாதவ் - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தனது அறிமுக போட்டியில் விளையாடிவரும் மயங்க் யாதவ் 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விகெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது.
Trending
பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களை கடந்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங்கும் அதிரடியாக விளையாடி 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 19 ரன்களைச் சேர்த்த நிலையில் மயங்க் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் 102-0 என இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த இரண்டு ஓவர்களில் 123-2 என மாறியது. அதிலும் குறிப்பாக இப்போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் மிரளவைத்தார்.
goes
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
/ by Mayank Yadav
Relishing the raw and exciting pace of the debutant who now has wickets to his name #PBKS require 71 from 36 delivers
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia #TATAIPL |… pic.twitter.com/rELovBTYMz
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துவீச்சாகவும் இது பதிவானது. அதுமட்டுமின்றி தொடர்ந்து அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவ் இப்போட்டியில் சராசரியாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி பஞ்சாப் அணி பேட்டர்களை நிலைகுழைய வைத்துள்ளார். இந்நிலையில் அதிவேகமாக பந்துவீசி வரும் மயங்க் யாதவ் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now