டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் எம் எஸ் தோனி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த 4ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கும், அதேசமயம் ஆர்சிபி அணி வெற்றிபெறுவதுடன் நல்ல ரன்ரேட்டில் இருக்கும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இதனால் இதில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பி கிடைத்துள்ளது.
Trending
அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் 251 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார். நாளைய போட்டியில் மகேந்திர சிங் தோனி மேற்கொண்டு ஒரு சிக்ஸரை அடிக்கும் பட்சத்தில் ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்து, ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை பெறுவார்.
மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 141 இன்னிங்ஸில் 357 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் ரோஹித் சர்மா 251 இன்னிங்ஸில் 277 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்திலும், விராட் கோலி 242 இன்னிங்ஸில் 267 சிக்ஸர்களை விளாசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now