-mdl.jpg)
ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கியா ரஹானே 5 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 21 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செலும் 17 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 66 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 20 ரன்களையும் சேர்த்து அசத்த, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது.