ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : 6ஆம் இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், ராஜத் பட்டிதா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரைசத கடந்தனர். மும்பை இதரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் 69 ரன்களையும், ரோஹித் சர்மா 38 ரன்களையும் சேர்க்க, சூர்யகுமார் யாடஹ்வ் 17 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 21 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அதன்படி இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது 2 வெற்றி, மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதன்மூலம் 4 புள்ளிகளைப் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் ஆர்சிபி அணி விளையாடிய 6 போட்டிகலில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் பட்டியலின் ஒன்பதாம் இடத்திலேயே தொடர்கிறது.
அதேசமயம் இப்பட்டியலின் முதல் இடத்தில் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தையும், 6 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ரன்ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now