
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ஐபிஎல் தொடங்கியது முதல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன்படி கார் விபத்தில் சிக்கி ஓராண்டு பிறகு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ள ரிஷப் பந்த், நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியை விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிவரை போராடியும் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றிப்பாதைக்கும் திரும்பும் முயற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.