
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. இதையடுத்து தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், ஷரத் ஆகியோர் நீக்கப்பட்ட மேத்யூ வேட், அபினவ் மனோகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணியில் நந்த்ரே பர்கருக்கு பதிலாக குல்தீப் சென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
அதிலும் கடந்த சில போட்டிகளாக சரியான தொடக்கம் கிடைக்காமல் தடுமாறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போட்டியின் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், அதன்பின் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். இதனால் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.