ஐபிஎல் 2024: தோனியின் சாதனையை முறியடித்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், பட்லர் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களிலு, ஷுபம் தூபே 25 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
இருப்பினும் தொடர்ந்து தனி ஆளாக போராடிய சஞ்சு சாம்சன் 86 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரோவ்மன் பாவெல், டோனவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 6 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் எம் எஸ் தோனி 165 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்ததே சதானையாக இருந்தது.
ஆனால் தற்போது சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸில் 200 ரன்களை விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இப்பட்டியலில் விராட் கோலி மூன்றாம் இடத்திலும், ரோஹித் சர்மா நான்காம் இடத்திலும், சுரேஷ் ரெய்னா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். அதுமட்டுமின்றி இப்போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர்களில் நான்காம் இடத்திற்கு சஞ்சு சாம்சன் முன்னேறியுள்ளார்.
அதன்படி இப்பட்டியளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் 10ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தையும், ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தையும், விராட் கோலி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள்
- சஞ்சு சாம்சன் – 159 இன்னிங்ஸ்
- எம்எஸ் தோனி – 165 இன்னிங்ஸ்
- விராட் கோலி – 180 இன்னிங்ஸ்
- ரோஹித் சர்மா – 185 இன்னிங்ஸ்
- சுரேஷ் ரெய்னா – 193 இன்னிங்ஸ்
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்
- ரோஹித் சர்மா - 276 சிக்ஸர்கள்
- விராட் கோலி - 258 சிக்ஸர்கள்
- எம் எஸ் தோனி - 248 சிக்ஸர்கள்
- சஞ்சு சாம்சன் - 205 சிக்ஸர்கள்
- சுரேஷ் ரெய்னா - 203 சிக்ஸர்கள்
Win Big, Make Your Cricket Tales Now