
சமீபத்தியில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை பகிர்ந்துகொண்டன. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எளிதாக வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றவாரே 213 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அத்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷமார் ஜோசப் தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் பந்துவீசியதுடன், அந்த இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன் மூலம் ஷமார் ஜோசப்பிற்கு சர்வதேச அளவில் பல்வேறு டி20 தொடர்களிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காயம் காரணமாக அவரால் ஐஎல்டி20, பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற தொடர்களில் பங்கேற்கமுடியாமல் போனது. இந்நிலையில், உலகின் அனைத்து சர்வதேச வீரர்களும் விளையாட ஆர்வம் காட்டும் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாட ஷமார் ஜோசபிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.