Advertisement

சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சித்தி விநாயகர் கோயிலியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 11, 2024 • 15:17 PM
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இரு அணிகளுக்கும் சரிவர அமையவில்லை.

இதில் ஆர்சிபி அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதேசமயம் மறுபக்கம் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending


இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் சக அணி வீரர்கள் இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா மற்றும் அவருடைய சகோதரர் குர்ணால் பாண்டியா ஆகியோர் தரிசனம் செய்தனர். இதனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தோல்விக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அந்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement