இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று தான் நினைத்தேன், ஆனால் ரஸல் தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ரு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியாது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஆண்ட்ரே ரஸல், பில் ஆல்ட் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டமுடியாமல் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய கேகேஆர் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றாலும் இந்த போட்டியை கடைசி பந்து வரை எடுத்து சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று தான் நினைத்தேன், ஆனால் ரஸல் தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். ரஸல் போன்ற ஒருவருக்கு கடைசி ஓவர்களில் பந்துவீசுவது மிக மிக கடினம். நான் என்ன தான் திட்டங்கள் வைத்திருந்தாலும், அதை சரியாகவே செயல்படுத்தியிருந்தாலும் ரஸல் போன்ற ஒருவரை கடைசி நேரத்தில் கட்டுப்படுத்துவது மிக கடினம்.
நாங்கள் பந்துவீச்சில் இன்னும் வித்தியாசமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஹென்ரிச் கிளாசென் மற்றும் சபாஷ் அஹ்மத் ஆகியோர் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி போட்டியை மீண்டும் எங்கள் கைவசம் கொண்டு வந்தனர். இந்த போட்டி கடைசி பந்து வரை வரும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு வலுவான அணிக்கு எதிரான அதன் சொந்த மண்ணில் மிக சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. சில விசயங்களை திருத்தி கொள்ள வேண்டியுள்ளது, தவறுகளை சரி செய்து மீண்டும் சிறப்பான கம்பேக்கை கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now