
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்சமயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாட முயற்சித்த ரோஹித் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷானும் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Trent Boult and first-over wickets, a match made in heaven #TATAIPL #IPLonJioCinema #RRvMI #IPLinMalayalam pic.twitter.com/7GgTCwNTdc
— JioCinema (@JioCinema) April 22, 2024
அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாரே சூர்யகுமார் யாதவும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். பின் இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீச அந்த ஓவரின் முதல் பந்தையே அடிக்க முயன்ற சூர்யகுமார் யாதவ் பந்தின் வேகத்தை கணிக்க தவறி தூக்கி அடிக்க, அது நேராக ரோவ்மன் பாவெல் கைகளில் தஞ்சமடைந்தது.
It's all at the moment in Jaipur!
— IndianPremierLeague (@IPL) April 22, 2024
Sandeep Sharma gets his second and it's the big one of SKY
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia #TATAIPL | #RRvMI pic.twitter.com/V6tPQo6WDX