கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் எங்கள் அணியின் வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதர் ஆகியொரது பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகார் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயஸ் 50 ரன்கள், ரிங்கு சிங் 24 ரன்கள், ரஸல் 27 ரன்கள், ரமன்தீப் சிங் 24 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 18 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 7 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதார் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் 55 ரன்களுக்கும், ராஜத் பட்டிதார் 52 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் மற்றும் லோம்ரோர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Trending
இறுதியில் சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கரண் சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ஆர்சிபி அணி பக்கம் திருப்பினார். இதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 20 ரன்கள் எடுத்திருந்த கரண் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே ஆர்சிபி அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் கேகேஆர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “இந்த விளையாட்டில் விதிகள் அனைவருக்கும் ஒன்று தான். நானும் விராட் கோலியும் அந்த பந்து இடுப்புக்கு மேல் இருந்ததாக தான் நினைத்தோம். ஆனால் விராட் கோலி க்ரீஸில் இருந்து வெளியில் இருந்ததால், க்ரீஸ் இடத்தில் இருந்து பந்தின் அளவு கணக்கிடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போட்டியில் எங்கள் அணியின் வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதர் ஆகியொரது பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது. ஆனால் சில நேரங்களில் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் போது, நிச்சயம் மனதிற்குள் பதற்றம் வருவது இயல்பு தான். இதன் காரணமாகவே சுனில் நரைன் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தார். இந்த விளையாட்டைப் பொறுத்தவரையில் ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கி நிதானமாக விளையாட நேரம் கிடைக்காது.
வெளிப்படையாக கூற வேண்டும் எனில் தற்போது உங்களிடம் கூடுதலாக ஒரு பேட்டர் விளையாட முடியும். அதனால் நீங்கள் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கலாம். எங்கள் அணி கடைசி வரை போராடியதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஏனெனில் இன்றைய போட்டியில் நாங்கள் பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். கடைசி நேரத்தில் சில ஓவர்களில் கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்த ரன்களுக்குள்ளாகவே கேகேஆர் அணியை கட்டுப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். பவர் பிளேவில் நானும், விராட் கோலியும் அதிக ரன்களை சேர்க்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தோம். தொடக்கத்திலேயே பவுண்டரிகளை விளாச நினைத்தோம். அந்த முயற்சிக்கு முழு மதிப்பெண்களையும் கொடுக்கலாம். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now