பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஷிகர் தவான்!
நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களைச் சேர்த்தார்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்றோர் சோபிக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 77 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இறுதியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், “பெங்களூர் அணியுடனான இந்த போட்டி மிக சிறப்பானது. போட்டியை எங்கள் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தபோதிலும் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நாங்கள் பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதல் 6 ஓவர்களில் நானும் நிதானமாக விளையாடிதன காரணமாக எங்களால் அதிக ரன்களைச் சேர்க்க முடியவில்லை. நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது.
விராட் கோலி போன்ற ஒரு சிறந்த வீரரிடம் வரும் கேட்சை தவறவிட்டுவிட்டாலும், இது போன்ற தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். நாங்கள் அந்த கேட்சை பிடித்திருந்தால் போட்டியின் முடிவும் எங்களுக்கு சாதகமாக அமைத்திருக்கலாம். நான் இந்த போட்டியில் நல்ல ரன்கள் குவித்திருந்தாலும், இன்னும் சற்று அதிரடியாக விளையாடி கூடுதலாக ரன் சேர்த்திருக்க வேண்டும். அடுத்தடுத்து சில முக்கிய விக்கெட்டுகளை இழந்ததும் எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிட்டது. தவறுகளை சரி செய்து அடுத்த போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now