தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எங்களிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 சீசன்கள் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, அதில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். இந்நிலையில் தற்சமயம் 42 வயதை எட்டியுள்ள தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை வழங்கி இருந்தார்.
Trending
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடருடன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல்களும் வெளியாகினர். ஆனால் கடந்த ஆண்டே தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி கூறியிருந்த நிலையில், இந்த சீசனில் அது நடக்கவில்லை. ஒருவேளை இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தால் நிச்சயம் தோனி ஓய்வை அறிவித்திருப்பார்.
அனால் தற்போது அது நடைபெறாத நிலையில், மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிப்பாரா அல்லது மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்றே அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து அந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
MS Dhoni’s future with CSK remains a mystery! pic.twitter.com/EqvtzOQXM4
— CRICKETNMORE (@cricketnmore) May 20, 2024
இந்நிலையில்,“தோனி தனது ஓய்வு முடிவு குறித்து இதுவரை எந்த தகவலும் எங்களிடம் சொல்லவில்லை. அதுபோன்ற விஷயத்தை அவர் எங்களுடன் பேச மாட்டார். அவர் தான் அதனை முடிவு செய்வார். எனக்கு தெரிந்து இன்னும் ஒருசில மாதங்களில் அவர் தனது முடிவை அறிவிப்பார்” என்று சிஎஸ்கே அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் தோனியின் முடிவு என்னவாக இருக்கு என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now