ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்றை உருவாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் எனும் வரலாற்று சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் நிற்காமல் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் தனது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்து மிரட்டினார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் எனும் புதிய வரலாறையும் படைத்ததுடன் பல்வேறு சாதனைகளையும் உடைத்துள்ளார். முன்னதாக மனிஷ் பாண்டே 19 வருடம் 253 நாள்களில் சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், தற்போது வைபவ் சூர்யவன்ஷி 14 வருடம் 32 நாள்களில் சதமடித்து வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். மேற்கொண்டு உலகளவில் டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
மிக இளம் வயதில் சதமடித்த வீரர்கள் (ஐபிஎல்)
- 14y 032d - வைபவ் சூர்யவன்ஷி v குஜராத் டைட்டன்ஸ்*
- 19y 253d - மனிஷ் பாண்டே v டெக்கன் சார்ஜர்ஸ்
- 20y 218d - ரிஷப் பந்த் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- 20y 289d - தேவ்தட் பாடிக்கல் v ராஜஸ்தான் ராயல்ஸ்
One for the history books!#VaibhavSuryavanshi #RahulDravid #RajasthanRoyals #RRvsGT pic.twitter.com/FkPmoNtJwQ
— CRICKETNMORE (@cricketnmore) April 28, 2025
மேற்கொண்டு இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரர் எனும் யூசுப் பதானின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுஃப் பதான் 37 பந்துகளில் சதமடித்திருந்த நிலையில் சூர்யவன்ஷி அதனை முறியடித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதத்தை பதிவுசெய்த வீரராக கிறிஸ் கெயில் தொடர்கிறார்.
ஐபிஎல் தொடரில் அதிவேக சதமடித்த வீரர்கள்
- கிறிஸ் கெயில் - 30 பந்துகளில்
- வைபவ் சூர்யவன்ஷி - 35 பந்துகள்*
- யூசுஃப் பதான் - 37 பந்துகள்
- டேவிட் மில்லர் - 38 பந்துகள்
- டிராவிஸ் ஹெட் - 39 பந்துகள்
- பிரியான்ஷ் ஆர்யா - 39 பந்துகள்
Also Read: LIVE Cricket Score
இப்போட்டியில் ருத்ரதாண்டவமாடிய வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணை முதல் விக்கெட்டிற்கு 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியைத் ஏறத்தாழ உறுதிசெய்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now