மே 17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ அறிவிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், தொடரின் முதல் பிளே ஆஃப் மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆட்டங்கள் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும், இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டம் ஜூன் ஒன்றாம் தேதியும், இறுதிப்போட்டியானது ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போட்டிகள் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறவுள்ளது.
முன்னதாக இத்தொடரின் இறுதிப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்சமயம் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகான மைதாங்கள் மற்றியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
— CRICKETNMORE (@cricketnmore) May 12, 2025Also Read: LIVE Cricket Score
தற்போதுவரை 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் 58 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவுள்ளனர். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now