தோனி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் எப்போது அணியுடன் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
எம்எஸ் தோனி எந்த அணியில் இருக்கிறாரே, அதில் அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் அந்த குழுவைச் சுற்றி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பார் என முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
அந்தவகையில் சென்னை அணியும் நேற்று மாலை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.
Trending
மேற்கொண்டு அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து உருவாக்கி வரும் பிடிப்பு பற்றி தனது அபிமானத்தைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இரண்டு சீசன்களுக்கு முன்பு அவர் தனது மோசமான சீசனைக் கொண்டிருந்தார், ஆனால் கடந்த ஆண்டு மீண்டும், பழைய எம்எஸ் தோனி போல் சில ஆட்டங்களில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இப்போதும் அவர் அதே ஃபார்மில் தன் இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் சிஎஸ்கே அணி அவரை சீசன் முழுவதும் பெறாமல் போகலாம். அவரை விளையாட்டிற்கு வெளியே விட்டுவிட்டு, தேவைப்படும் போட்டிகளில் மட்டுமே அவரை பயன்படுத்தலாம் என்றும் நினைக்கலாம், மேலும் அவர்கள் அவரிடமிருந்து சிறந்ததைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அவர் எந்த அணியில் இருக்கிறாரே, அதில் அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் அந்த குழுவைச் சுற்றி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பார்.
Also Read: Funding To Save Test Cricket
அவர் களத்தில் இறங்கி விளையாடுகிறாரோ அல்லது வெளியே ஓரமாக அமர்ந்திருக்கிறார் என்பது பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. ஆனாலும் அவர் சென்னைக்கு அணிக்கு முக்கியமானவர், களத்திற்கு வெளியே இருந்தாலும் அவரால் அந்த தலைமையை வழிநடத்த முடியும். 10, 12, 14 வருடம் தொடர்ச்சியாக இவ்வளவு உயர் மட்டத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளக்கூடியவர்களே சிறந்த வீரர்கள். அப்படி ஒரு வீரர் தான் எம் எஸ் தோனி” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now