நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - எம் எஸ் தோனி!
தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்ததில் விளையாடுவது கடினம். அதனால் இந்த அட்டத்தில் எங்களுக்கு ஒருபோதும் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த தோல்வியின் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5ஆவது தோல்வியைச் சந்தித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசி மகேந்திர சிங் தோனி, “எங்கள் வழியில் செல்லாத சில போட்டிகள் உள்ளன. எங்களுக்கு சவால் இருந்திருக்கிறது, சவாலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பந்து வீசியபோது அது பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் நீங்கள் அதிக விக்கெட்டுகளை இழக்கும்போது, அழுத்தம் இருக்கும்.
Trending
மேலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்ததில் விளையாடுவது கடினம். அதனால் இந்த அட்டத்தில் எங்களுக்கு ஒருபோதும் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சூழ்நிலையைப் பார்ப்பது முக்கியம், இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாகச் செயல்பட்டோம், எங்களுடைய பலத்தை மீட்டெடுத்து, நீங்கள் விளையாடக்கூடிய ஷாட்களை விளையாடுகிறோம். அதனால் இது மற்ற அணிகளுடைய பேட்டிங்கிற்கு நிச்சயம் பொருந்தாது.
எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் சிறந்தவர்கள், அவர்கள் உண்மையான கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறார்கள். அதனால் அவர்கள் எல்லையை தாண்டி அடிக்கவே அல்லது பந்தை காற்றில் அடிப்பதையோ விரும்புவதில்லை. அதனால் ஸ்கோர் கார்டைப் பார்த்து விரக்தியடையாமல் இருப்பது முக்கியம். அதனால் பேட்டர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவேண்டும். நாங்கள் விக்கெட்டுகளை இழந்தால், மிடில் ஆர்டர் தங்கள் வேலையை வித்தியாசமாகச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிததனர். இதில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 31 ரன்களையும், விஜய் சங்கர் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயின்டன் டி காக் 23 ரன்களிலும், சுனில் நரைன் 44 ரனக்ளிலும் விகெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே 20 ரன்களையும், ரிங்கு சிங்15 ரன்களையும் சேர்த்க்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now