ஐபிஎல் 2025: முதல் போட்டியை தவறவிடும் ஹர்திக் பாண்டியா; காரணம் என்ன?
கடந்த ஐபிஎல் தொடரின் போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சீசனின் முதல் போட்டியை அவர் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Trending
அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. அதேசமயம் அந்த அணி ஒரு சில போட்டிகளில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த தொடர்ச்சியாக இதே தவறை செய்ததன் காரணமாக அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதன் காரணமாக, இந்த சீசனின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடைவிதிக்கப்படும் என்பதால், அவரால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now