
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஜோஸ் பட்லரின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 90 ரன்களையு, சாய் சுதர்ஷன் 52 ரன்களையும், ஜோஸ் பட்லர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சாய் சுதர்ஷன் நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் பெருமையுடன், அதிக ரன்களைக் குவித்த வீரருக்கான ஆர்ஞ்சு தொப்பியையும் தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து பேசிய சுதர்ஷன், “ஆட்டத்தின் தொடக்கத்தில், பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது, பவர்பிளேயில் எங்களுக்கு ரன்களைச் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது. அதன் பிறகு, விக்கெட்டின் வேகத்தைப் புரிந்துகொண்டோம்.