இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது - மொயீன் அலி!
உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும் என்று கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், கேகேஆர் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read
இந்நிலையில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு மத்தியில் எதிர்வரும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டர்கள் வெளிப்படையான பேட்டிங் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாம் வெளியே சென்று வீரர்களாக நம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் களத்தில் சிறப்பாகவும் செயல்பட வேண்டும். சில நேரங்களில் வெளியில் இருந்து பார்க்கும்போது பொதுவாக வீரர்கள் மீது அழுத்தம் அதிகமாக இருப்பதைக் காணலாம். ஆனால் உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும்.
எங்கள் உண்மையான பலம் என்னவென்றால், ஷாட்களை விளையாடக்கூடிய வீரர்கள் எங்களிடம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது, சுனில் நரைன் போன்ற ஒருவர் கிட்டத்தட்ட மிகவும் ஆக்ரோஷமானவர், ஆனால் எங்களிடம் அஜிங்கியா ரஹானேவும் இருக்கிறார், அவர் அழகான ஷாட்களை விளையாடும் மற்றும் அபாரமான ஃபார்மில் இருக்கும் ஒரு கிளாசிக்கல் வகை வீரராவார். அதனால் எங்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள்.
Also Read: LIVE Cricket Score
மேலும் எங்களால் இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. வரலாற்றைப் பார்த்தால், உதாரணத்திற்கு மும்பையைப் பார்த்தாலும் கூட, அவர்களுக்கு தொடரின் ஆரம்பத்தில் கொஞ்சம் மோசமான தொடக்கம் இருந்தது, இப்போது அவர்கள் தொடர்ச்சியாக நான்கு, ஐந்து வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் எங்களாலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now