
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் அணி எது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்ரவர்த்தி, “தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது, ஆனால் ஒவ்வொரு புதிய போட்டியின் போதும், உங்களுடைய கடைசி போட்டியை மனதில் வைத்து, நீங்கள் புதிதாக தொடங்க வேண்டும். ஐபிஎல் ஒரு வித்தியாசமான விளையாட்டு, அது ஒரு வித்தியாசமான மிருகம். என் வழியில் என்ன வரப்போகிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.