ஐபிஎல் 2025: பட்லர், ஷுப்மன் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 225 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசியதுடன் முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சாய் சுதர்ஷன் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களில் விக்கெட்டை இழ்ந்தார்.
அதன்பின் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 76 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியில் மிரட்டி வந்த ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லரும் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 15 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 6 ரன்னிலும், ரஷித் கான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now