
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.
அதேசமயம் இத்தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது முதல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்று முடிந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் கேஎல் ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதனால் எதிர்வரும் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் கேஎல் ராகுல் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.