ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த இரு சீசன்களாக மும்பை அணியின் பயிற்சியாளராக மார்க் பௌச்சர் செயல்பட்டுவந்தார்.
ஆனால் மார்க் பௌச்சரின் பயிற்சியில் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்தடுத்த தொடர்களில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியில் இருக்கும் வீரர்கள் இடையேயான உறவிலும் பெரிதளவில் விரிசல் ஏற்பட்டது. அதிலும் கடந்த சீசனில் அந்த அணியானது அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்துடன், பிளே ஆஃப் சுற்றில் இருந்தும் வெளியேறியது. இதனால் மார்க் பௌச்சரை அந்த அணி நிர்வாகம் நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
MAHELA JAYAWARDENE is back in Mumbai Indians' Dressing room! pic.twitter.com/ZcQ4bfz8fk
— CRICKETNMORE (@cricketnmore) October 13, 2024Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாகவே தற்சமயம் மஹேலா ஜெயவர்தனே அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளர். முன்னதாக கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேலே ஜெயவர்தனே செயல்பட்டுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியானது மூன்று முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now