
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் சான்ட்னர் மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோருக்கு பதிலாக கரண் சர்மா மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அடுத்தடுத்து சிக்ஸர்களுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய ரோஹித் சர்மா 12 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் ரிக்கெல்டன் 25 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதன் காரணமாக, இருவரும் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது.